மலர்: எங்கிருந்து நமது பயணத்தை துவங்குவோம் ?
தமிழறிஞர்: முதல் திருமுறையில் உள்ள, முதல் தொகுதியில் அமையப்பெற்றுள்ள தெய்வ மணிமாலையில் முப்பத்தி ஒன்று செய்யுள்கள் உள்ளன.
மருத்துவர்: முதல் செய்யுளை முதலில் காண்போம்
தமிழறிஞர்: திருவோங்கு என்று துவங்கும் செய்யுள் இது. இதில் 16 வரிகள் உள்ளன.
மருத்துவர்: முதல் வரியிலேயே சென்னையின் நிலப்பகுதியினை வர்ணிக்கிறார் வள்ளாலார்.
அறியாள்: எப்படி ?
தமிழறிஞர்: “தருவோங்கு சென்னையிற்” என்ற சொற்கள் மூலமாக ,மரங்கள் நிறைந்து சென்னை என்று பாடுகிறார்.
அறியாள்: இதிலென்ன அறிவியல் உள்ளது ?
மருத்துவர்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமையப்பெற்ற சென்னையின் அமைப்பை அறிந்துகொள்ள இந்த பாடல் துணைபுரியும்.
எழில்: சென்னையை பற்றி எவ்வாறு வர்ணிக்கிறார் , விளக்கமாக கூறவும் ?
தமிழறிஞர்: அக்காலத்தில் சென்னை நகர் இன்று உள்ளதை போன்று பெரிய நகராக அமையப்பெறவில்லை. மாறாக, குறுகிய பரப்பளவை உடைய நிலப்பகுதியாக சென்னை இருந்தது.
தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய சென்னையின் மூன்று பாகங்களிலும் மிக உயரமாக வளரும் தன்மையை உடைய உயரிய மரங்கள் தழைத்து ஒரு சோலை போல சென்னை இருந்தது என்று நம்மால் இன்று அறிய முடிகிறது.
தமிழறிஞர்: ஆம், ஒரு நிலப்பகுதி முற்காலங்களில் எப்படி இருந்தது என்று அந்த காலத்தை ஒட்டிய இலக்கியங்கள் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
மலர்: “...கந்த கோட்டத்துள் வளர்” என்ற வரி எதனைக் குறிக்கிறது ?
தமிழறிஞர்: பழங்காலத்தில் ஒரு வழக்கம் மக்களிடையே இருந்தது, அதாவது கோட்டம் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தினர்.
எழில்: கோட்டம் என்ற சொல் எதனை குறிக்கிறது ?
தமிழறிஞர்: சில கோயில்களை கோட்டம் என்று அழைக்கும் வழக்கம் தமிழ் சமூகத்தில் இருந்தது.
எழில்: கோட்டம் எவ்வளவு பெரிதாக இருக்கும் ?
தமிழறிஞர்: சில கோயில்களை கோட்டம் என்று அழைக்கும் வழக்கம் தமிழ் சமூகத்தில் இருந்தது.
எழில்: கோட்டம் எவ்வளவு பெரிதாக இருக்கும் ?
தமிழறிஞர்: பெரிய பரப்பளவை உடையதாக இருக்கும். மேலும் தெரிந்துகொள்ள, கல்வெட்டுகளை ஆராயும் அறிஞர்களை தொடர்புகொள்ளவும்
மருத்துவர்: “தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி” என்ற சொற்களின் மூலமாக “குளிர்ந்த தோற்றத்தை உடைய தூய மாணிக்க மணி “ என்று வள்ளலார் கூறுகிறார்.
அறியாள்: இந்த வாக்கியத்தில் என்ன அறிவியல் உள்ளது ?
தமிழறிஞர்: மாலையாக மணிகளை அணியும் பழக்கம் பழங்காலம் முதலாக தமிழ் சமூகத்தில் இருந்துள்ளது, உலகின் பல நாகரீகத்திலும் இந்த பழக்கம் இருந்துள்ளது, இன்றளவும் உள்ளது.
எழில்: ஏன் இவற்றை அணிகிறார்கள், இதற்கு ஏதும் உளவியல் காரணம் உள்ளதா ?
மருத்துவர்: ஆம், அதற்கு ஒரு உளவியல் காரணமும் உள்ளது.
"மணிகள்" ஒருவித தூய ஒளியினை தோற்றுவிக்கின்றன,மேலும் அவற்றின் நிறமும் ஒருவித இதமான உளவியல் தாக்கத்தை மனதில் ஏற்படுத்துகிறது.
மருத்துவர்: ஆம், அதற்கு ஒரு உளவியல் காரணமும் உள்ளது.
"மணிகள்" ஒருவித தூய ஒளியினை தோற்றுவிக்கின்றன,மேலும் அவற்றின் நிறமும் ஒருவித இதமான உளவியல் தாக்கத்தை மனதில் ஏற்படுத்துகிறது.
அறியாள்: மாணிக்க மணிக்கு குளிர்ந்த தோற்றம் எப்படி வரும் ?
மருத்துவர்: மனிதர்கள் அணியக்கூடிய பல்வேறு மணிகளுள் பல்வேறு உளவியல் தாக்கங்கள் உள்ளன என்று இன்று பரவலாக ஆய்வுகள் போற்றுகின்றன
மனம் அமைதிபெற சில வகையான மணிகளை தெரிவு செய்து அணியவேண்டும் என்று மருத்துவர்களே ஆலோசனை சொல்லும் காலம் இன்றைய காலம். அன்றே இதுபற்றி கருத்தை பதிந்துள்ளார் வள்ளலார்.
தமிழறிஞர்: “ஞான வுரு வோங்கும் உணர்வின் நிறை ஒழி யோங்கி”
மருத்துவர்: ஒருவரது உள்ளத்தில் ஓங்குகின்ற இன்பமான உணர்வினை பெற்றால், அதாவது மகிழ்ச்சியான நிம்மதியான அமைதியான ரசிக்கின்ற மனநிலையை பெற்றால் அதனை உணர்கின்ற மற்ற உள்ளங்களும் அழகான வடிவம் (சிறப்பான குணம்) பெரும், அதன் பின்னர் அவை தானாகவே சிறப்புற்று ஒளிவீசும் என்ற உளவியல் கோட்பாட்டினை இதன்மூலம் விளங்கிக்கொள்ள முடியும்.
தமிழறிஞர்: இரண்டாவது செய்யுளை இனி காண்போமாக.
தமிழறிஞர்: இரண்டாவது செய்யுளை இனி காண்போமாக.








நல்லதொரு விளக்கம். உளவியல் ரீதியாகவும் எடுத்துக்காட்டி இருப்பது சிறப்பு. எப்படிச் சொல்லப் போறீங்கனு ஆவலுடன் காத்திருந்தேன்.
ReplyDelete