Total Pageviews

Saturday, 21 December 2013

அத்தியாயம் எட்டு - வள்ளலார் ஒரு சித்த மருத்துவர்.

அத்தியாயம் எட்டு - வள்ளலார் ஒரு சித்த மருத்துவர்.



மருத்துவர்: கோடி உயிர்களை ஒரு உயிரில் இருந்து (ஆதம்) படைக்கும் திரன் உடைய இறைவனால் எல்லாம் முடியும்.

அறியாள்: பெண் சிசுவின் கருவகத்தில் உண்மையில் நடப்பது என்ன சற்று விளக்க முடியுமா?

டாக்டர்: பெண் சிசுவின் கருவகத்தில் இரண்டு முதல் ஏழு மாதம் வரை அதிக அதிக எண்ணிக்கையில் கருமுட்டைகள் உருவாகும், உயிரணுக்கள் பிளவுபட்டு எண்ணிக்கையில் பல்கிப்பெருகும். அவை ஒடுக்கற்பிரிவு (meiosis) எனப்படும் ஒரு வகையான உயிரணு பிளவு நிலைக்குள் நுழையும்.

அறியாள்: நுழையும் என்றல் என்ன பொருள் ?



டாக்டர்: பன்னிரெண்டாவது வாரத்தில் சில கருமுட்டைகள் மட்டுமே இந்த கருமுட்டைகள் செயல்பாட்டினுள் நுழையும், மெதுவாக அனைத்தும் நுழைந்து ஐந்தாவது  மாதத்தில் அனைத்து கருமுட்டைகளும் இந்த செயல்பாட்டினுள் நுழையும் ஆனால், அவை தங்களது உடலியக்க செயல்பாட்டினை உடனே முடிக்காமல் ஒருவகையான செயலற்ற நிலைக்கு சென்றுவிடும். 

அறியாள்: இந்த செயலாற்ற நிலை எவ்வாறு ஏற்படுகிறது ?



டாக்டர்: ஆங்கிலத்தில் Oocyte Maturation Inhibiting Peptide என்று அழைக்கப்படும் ஒரு வகையான புரதம் இதற்கு காரணமாகும்.              

அறியாள்: இந்த செயலாற்ற நிலையில் அவை எவ்வளவு காலம் இருக்கும் ?


டாக்டர்: அந்த சிசு, பிறந்து வளர்ந்து பூப்படையும் வயதை அடையும் வரை அவை  செயலாற்ற நிலையில் அமைதியாக இருக்கும்.

அறியாள்: இத்தனை காலம் இந்த உறைநிலை நீடிக்குமா, ஆச்சர்யமாக உள்ளதே !!!

மலர்: இவ்வாறு செயலாற்ற நிலையில் எத்தனை கருமுட்டைகள் இருக்கும்?

டாக்டர்: இருபது வார பெண் சிசுவின் கருவகத்தில் அறுபது முதல் எழுபது லட்சமாக இருக்கும் எண்ணிக்கை, அந்த பெண் சிசு பிறக்கும் பொழுது இரண்டு முதல் நான்கு லட்சமாக குறையும்.

வளர்ந்து பருவமடையும் வயதில் அது நாற்பது ஆயிரமாக குறையும், வொவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் பொழுதும் சில என்ற எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய காலகட்டத்தில் பூப்பூ காலம் (Menarche) முதல் மாதவிடாய்வற்றுதல் (மெனோபாஸ்)  (Menopause) வரை நானூறு முதல் ஐந்நூறு கருமுட்டைகள் வளர்ந்து வெளியாகும்.



தமிழாசிரியர்: இறைவன் மிகப்பெரிய படைப்பாளி, அவனால் எப்படியான எண்ணிக்கையையும் படைக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.

மலர்: காம வுட்  பகைவனுற் அர்த்தமுள்ள சொற்றொடர்.

டாக்டர்: வள்ளலார் சித்த மருத்துவம் பயின்ற மருத்துவர்.

எழில் : உணர முடிகிறது. உணர்ந்தவரை உணர முடிகிறது.   

  

No comments:

Post a Comment