அத்தியாயம் - ஒன்பது
மலர்:
"கோபவெங் கொடியனும்" என்ற சொற்றொடர்
எதனைக் குறிக்கிறது ?
தமிழாசிரியர்:
"கோபம் என்னும் கொடியவனும்" என்று
அதனை பொருள் கொள்ளவேண்டும்.
அறியாள்: விளக்கமாக கூறவும் ?
தமிழாசிரியர்: "கோபம்" என்னும் குண இயல்பு மனிதர்களுக்கு கேட்டினை விளைவிப்பதால் அதனை "கோபவெங் கொடியனும்" என்று வள்ளலார் கூறுகிறார்.
எழில்: கோபம் மனிதர்களுக்கு கேடு
விளைவிக்கும் என்ற சிந்தனை மிகவும் பழமையானது, எதார்த்தமானது, அனைவரும் ஏற்பது.
ஆகையினால், நானும் ஏற்கிறேன். சரி கேடு என்று சொல்கிறீர்களே, அந்த கேடானது நமது உள்ளத்துக்கா
? அல்லது நமது உடலுக்கா ?, நம் எதிரே நிற்பவரின் உள்ளத்துக்கா ? அல்லது
உடலுக்கா ? என்ற சில கிளைக் கேள்விகளை முன்வைத்தால் எப்படி
பதில் கூறுவீர்கள் ?
டாக்டர்: நீங்கள் கூறிய நான்கு நிலைகளுக்குமே கேடுதான். அதிநவீன மருத்துவத்தின் ஆழத்தில் சென்று பல திசைகளில் பயணித்து அறிவியல் செய்திகளை இவ்விடத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
அறியாள் : அதுதான் தேவை, காத்திருக்கிறோம்.
டாக்டர்: கோபமானது, கோபம் கொள்பவரின் உள்ளத்தின் பகுதிகளை "Parts of the Psyche" கெடுக்கும். மேலும் கோபம் கொள்பவரின் உடலின் உடல் இயக்க செயல்பாடுகளையும் கெடுக்கும் "Somatic Derangements"
அரியாள்: கோபம் உடலின் செயல்பாட்டினை எந்த மருத்துவ அடிப்படையில் கெடுக்கும் ?
தமிழாசிரியர்:
இந்த கேள்வியை வள்ளலாரின் சொல்கொண்டே விளக்க முடியும்.
தமிழாசிரியர்: வள்ளலார் எழுதிய அந்த சொற்றொடரை மீண்டும் ஒரு முறை காண்க, "கோபவெங் கொடியனும்" , கவனமாக "வெங்" என்று பிரித்து காண்க. பொறி அறிவு சிறிது வளர்ந்தவுடன் மனிதர்கள் கோபம் கொள்ளும் குணத்தை பெறுகிறார்கள். கோபமானது உடலை வெதும்பி, முகத்தை சிவப்பித்து , செவ்விய சொற்களை வெளிப்படுத்தி கொடுமை செய்யும் என்று தனது உரையில் ஔவை சு.துரைசாமிப்பிள்ளை கூறுகிறார்.
எழில்: இன்னும் நீங்கள் "வெங்" என்ற சொல்லின் ஆழத்தை விளக்கவில்லை.
டாக்டர்: கோபமானது மனித உடலில் ஏற்படுத்தும் அனைத்து மாற்றங்களுமே முக்கியமாக இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாக கொண்டுள்ளன.
டாக்டர்: மனிதர்கள் கொபம்கொல்வது போன்ற உணர்ச்சிவயப்பட்ட நிலைகளை அடையும் பொழுது அது அவர்களின் உடல் நலன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அறிவியல் அறிஞர்களிடையே வெகுகாலமாக நீடித்திருக்கும் உண்மையாகும்.
மேற்க்கத்திய அறிவியல் வரலாற்றின்படி, 1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வே என்ற மேல்நாட்டு ஆய்வாளர் மனதில் ஏற்படும் நிகழ்வுகள் இதயத்தின் செயல்பாட்டினை பாதிக்கும் என்று கருத்து கூறினார். வெறுமனே ஒரு கருத்தியலாக அவரது கருத்தை ஏற்ற நிலையிலும் ஆய்வுகளின் மூலமாக அதனை ஏற்கவும் விடுக்கவும் அறிவியல் உலகத்தால் முடியவில்லை. ஆனால் இன்று மிகவும் தெளிவாக உணர்வு நிலைகள் இதயத்தின் செயல்பாட்டினை பாதிக்கும் என்று பற்பல ஆய்வுகள் மூலமாக நிரூபித்துள்ளார்கள்.
எழில்:
எவ்வகயினில் கோபமும் இதயத்தின் செயல்பாடுகளும் இணைந்துள்ளன ?
டாக்டர்: ஒன்றல்ல, பல நிலைகளில் இந்த இணைப்பு அமைந்துள்ளது
மலர்: இவற்றை எங்களுக்கு விலக்க முடியுமா ?
டாக்டர்: எதிர்மறையான உணர்ச்சிகள் (Negative Emotions) ஒன்றுடன் ஒன்று திரளாக இணையும் நிலையில் பேத்தோபிஸியலாஜிகல் (Pathophysiological) உளவியல் சார்ந்த உடல் இயக்க இயல் மாற்றங்களை மனித உடலில் ஏற்படுத்தும்.
மலர்: எப்படி இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன ?
டாக்டர்: நரம்பு இயக்குநீர் முறைமைகள் (Neurohormonal) மற்றும் அவற்றின் இயங்கு முறைகளில், அதாவது அவற்றின் இயங்கும் விசைகளில் (Mechanisms) நிலையான மாற்றங்களை (steady activation) மீண்டும் மீண்டும் செயல்படுத்துவதன் மூலமாக அவற்றின் வழியே உடலினுள் நிகழும் நிகழ்வுகள் மாற்றமடைகின்றன.




_Venenbild.jpg)










