தமிழாசிரியர் : இரண்டாவது பாடலை இனி காண்போம்
எழில்: சரி.
அறியாள் : இரண்டாவது பாடலில் என்ன உளவியல் செய்தி உள்ளது ?
தமிழாசிரியர் : ஒரு கோட்பாட்டினை அணுகும் முன்னர், அந்தக் கோட்பாட்டுடன் தொடர்புடைய அனைத்து சிந்தனைகளையும் நீதத்துடன் ஆராய வேண்டும்.
நாம் ஏற்கும் சித்தாந்தம் பற்றி மட்டும் விளக்கி மற்றவற்றை அர்த்தமற்றவை போன்று அணுகக் கூடாது.
மருத்துவர்: ஆம், சித்தாந்தங்களை ஆராய்வதில் காழ்ப்புணர்வு கூடாது. நிச்சயமாக இதுவே மிகவும் முதிர்ந்த நிலையில் உள்ள சிந்தனையாகும்.
தமிழாசிரியர் : மக்கள் கடவுள் கொள்கையில் காண விழையும் பல கேள்விகளை அடுக்குகிறார் வல்லாளார்.
மருத்துவர்: மக்களுடைய எதார்த்த சிந்தனைகளை உள்வாங்கி அவற்றை அடுக்கி, மக்களை உணர்ந்து தனது பாடலை எழுதியுள்ளதை நிரூபிக்கிறார் வள்ளலார்.
அறியாள் : அவர் அப்படி அடுக்கிய கேள்விகள் என்ன ?
தமிழாசிரியர் : பரமேது ? வினைசெயும் பயனேது ? பதியேது ? பசுவேது ? பாச மேது ? பத்தியேது ? அடைகின்ற முத்தியேது ? அருளேது ? பாவ புண்ணியங்க ளேது ? வரமேது ? தவமேது ? விரதமேது
இப்படியாக பல கேள்விகளை அடுக்கி வைக்கிறார் வள்ளலார்.
அறியாள் : சமய நெறிகள் பற்றி மேலும் என்ன கூறுகிறார்?
மருத்துவர்: மன்னிக்கவும், இது வெறும் அறிவியல் பார்வை மட்டுமே.
சமய பார்வைக்கு ஆயிரமாயிரம் சிறப்புமிகு நூல்கள் உள்ளன, அவற்றை படித்து தெளிவு பெறவும்.
மலர்: “கயவரைக் கூடா தருள்” என்று கூறுவதன் பொருள் என்ன ?
தமிழாசிரியர் : சில மக்களை நமக்கு அடையாளம் காட்டுகிறார், அவர்களிடம் இருந்து நம்மை இறைவன் காப்பானாக என்று பிரார்த்தனை செய்தவாறு இரண்டாவது பாடலை முடிக்கிறார்.
அறியாள் : அப்படி என்ன குற்றம் செய்தார்கள் அவர்கள் ?
தமிழாசிரியர் :
மனம் ஆசைப்படுகின்ற உணவை உண்டு
நல்ல ஆடைகளை உடுத்தி
இளம் பெண்களை விரும்பி அடைந்து
மணம் வீசும் பூக்களைச் சூடி
சிற்றின்பத்தை பெரிதாக ஏற்று
அதுவே கண்கண்ட சுகம் என்று நம்பி வாழும் மக்களை கீழ்மக்கள் என்று கூறுகிறார் வள்ளலார்.
அறியாள் : மனம்போல வாழ்வது தவறா ?
நீங்கள் சொல்வது தனி மனித உரிமை மீறல் என்று நாங்கள் திரும்பி சொன்னால் என்ன செய்வீர்கள் ?
அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் இந்த சிந்தனையை வித்தியாசமாக பார்ப்பார்களே ?
தமிழாசிரியர் : அப்படி பார்த்து, பார்த்துதானே கேடுகெட்ட சமூகமாக பல சமூகங்கள் இன்று மருவியுள்ளன........
அவர்களே இன்று இந்திய சிந்தனைகளை தேடி வருவதை நம்மால் காணமுடிகிறது..........
இன்னும் நிறைய மாறும்.
மருத்துவர்: மற்ற உயிர்களை துன்புறுத்த எந்த உயிருக்கும் உரிமை இல்லை.
“ஆசையே” அனைத்து துன்பத்திற்கும் மூலம் என்று புத்தர் கூறிய செய்தியின் சாயல் இந்த பாடாளில் உள்ளது.
அவரும் (புத்தர்),இவரும் (வள்ளலார்) கூறியும் எவரும் (பொதுவாக மக்கள்) கேட்காது அழிவதும் ஏனோ ?

அன்பருக்கு வணக்கம் ...
ReplyDeleteநல்ல சிறப்பான, பொதுவான விளக்கங்கள் தங்கள் பயணம் இறை அருளால் தொடர வாழ்த்துக்கள் .
அன்புடன் .
இரா.அறிவழகன் .
நீதத்துடன்//
ReplyDeleteபுதிய சொல்லைக் கற்றேன். மனம் போல் வாழ்வதைத் தவறு என நன்றாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனாலும் இன்றைய நாட்களில் இவை எத்தனை பேருக்குப் புரியும்????:(