Total Pageviews

Saturday, 30 November 2013

“திருவருட்பாவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்கள்” - அத்தியாயம் இரண்டு

அத்தியாயம் இரண்டு
அறியாள்: திருவருட்பா எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்ட இலக்கியம் ?
 தமிழாசிரியர்:  பத்தொன்பதாம் நூற்றாண்டு
 அறியாள்: பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியத்தை கையில் எடுத்து அதன் மூலம் இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் வாழும் பள்ளி மாணவர்கள் அறிவியல் கற்கும் நிலைப்பாட்டினை ஏன்  மேற்கொள்ள வேண்டும் ?
 டாக்டர்: ஒரே சமயத்தில் அறிவியளையும் மென்ஞானத்தையும் கற்றறிந்த ஒரு தலைமுறையை உருவாக்க அதுவே ஏற்ற வழிமுறையாகும்.
 அறியாள்: எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள் ?
 தமிழாசிரியர்:  இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் மக்களின் கல்வித்தரம் மேல்நோக்கியே உள்ளது – லஞ்சமும், குற்றங்களும் அதுபோலவே மேல்நோக்கியே உள்ளது. நிறைய கல்வி நிறுவனங்கள்,பள்ளிக்கூடங்கள் உள்ளன, நிறைய வழிபாட்டு தளங்களும் உள்ளன, அனைத்தும் இருந்தும் மக்கள் ஒருவரை ஒருவர் அனைத்து இல்லையே ?  மதக்கலவரங்கள் நம் நாட்டில் சகஜம் என்ற நிலை உள்ளதே , ஏன் ?

Thiru 1
ஏன் இப்படி ஒரு நிலை ?
நமது கல்வித்தரத்தில் ஏதோ ஒரு ஆழமான குற்றம் நிலவுகிறது.
அதனை நீக்க வேண்டியது கல்வியாளர்களின் கடமை.
ஆனால் கல்வியாளர்கள் இயல்பான நிலையில் இயல்பான உண்மைகளை இயல்பாக வெளிப்படுத்துவதில்லை.
எழில்: இத்தனை இயல்புகளா ?
தமிழாசிரியர்: அத்தனை இயல்புகளும் இயல்புகளே. மேலும் அரசியல் வியாதிகளும் வியாதிகாலகவே சமூகத்தில் பரவியுள்ளன. அவையும் நிலையை மாற்ற இயல்பாக முயல்வதில்லை. தப்பைத்  தட்டி கேட்கவேண்டிய அதிகாரிகளும் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளார்கள்.
June_29_Athens_street_fire
மலர்: அதிகாரிகளின் கைகளில் விலங்கு உள்ளதா ?
OLYMPUS DIGITAL CAMERA
தமிழாசிரியர்: உள்ளத்திலும் விலங்கு உள்ளது.
 எழில்: இத்தனை விலங்குகளா ?
Kolmården_Wolf
தமிழாசிரியர்:  விளங்குதா பிள்ளைகளே ? சிலருடைய கைகளில் விலங்கு, பலரின் கைகளில் தங்க மோதிரம், தங்க காப்பு, வெளிநாட்டு கைக்கடிகாரம் என்று பலவும் உள்ளது, குழந்தாய்.....

டாக்டர்: ஐயா, அரசியல் வேண்டாமே....
 தமிழாசிரியர்: சரி.

மலர்: திருவருட்பாவில் போற்றப்படும் மெஞ்ஞான தத்துவங்கள் இன்றைய தமிழ்  சமூகத்துக்கு அவசியம் தேவை.

தமிழாசிரியர்:  ஆம், தமிழ் சமூகம் இன்று பல பிரிவுகளாக பிளவுபட்டு, ஒற்றுமையின்றி, பிரிந்து வாழ்கிறது.


2 comments:

  1. நன்று. அருமையான விளக்கம்.

    ReplyDelete
  2. word verification எடுத்துட்டு, கமென்ட் மாடரேஷன் வைக்கலாமே! இது ஒரு யோசனை தான்.

    ReplyDelete