Total Pageviews

Sunday, 8 December 2013

அத்தியாயம் - 5 - திருவருட்பாவின் மூலம் அறிவியல் - பாடல் 3,4,5.

அத்தியாயம் - 5 

அறியாள்: மூன்றாவது பாடலில் என்ன அறிவியல் உள்ளது ?

தமிழாசிரியர்: “துடியென்னும் இடையனம்” என்று ஒரு வரி வருகிறது கவனித்தீர்களா ?

டாக்டர்: ஆம், கவனித்தேன்.

தமிழாசிரியர்: அதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?


டாக்டர்: தடி, மேகத்திடைத் தோன்றும் மின்னல் என்று அதற்க்குப்பொருள்.

எழில்: அப்படியென்றால் ?


டாக்டர்: தடியான, அதாவது பெருத்த அளவினை உடைய மேகத்தில் இருந்து மழை பொழியும் என்று மழை மேகத்தின் தன்மையை விவரிக்கிறார் வள்ளலார்.


மலர்: அற்புதம். 



தமிழாசிரியர்: சரி, ஒரு தத்தவ கேள்வி, தேவைக்கு ஏற்ப நடிக்கும் திறன் மனிதர்களுக்கு மட்டும்தானே உள்ளது ?


டாக்டர்: யார் சொன்னது, மிருகங்களும் நடிக்கும் Apparent death "வெளிப்படையான இறப்பு" என்று இதனை அழைப்பர்.

எழில்: மிருகங்களில் காணப்படும் இந்த வகையான நடிப்பை பற்றி சற்று விரிவாக விளக்கமுடியுமா ?

டாக்டர்: ஹாக் மூக்கு பாம்பு (Hog Nose Snake) என்றொரு பாம்பு வகை உள்ளது, அது தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில்,தன்னை காத்துக்கொள்ள திடீரென்று இறந்துபோன பிணத்தை போல சுருண்டு படுத்துக் கொண்டு நடிக்கும், தனது உடலில் இருந்து  துர்நாற்றம் வீசும் ஒருவகையான ஆவியாகும் திரவத்தை கசிய வைக்கும், இந்த திரவத்தை சுவைக்கும் மற்ற ஊனுண்ணிகள், இது ஏற்கனவே இறந்துபோன அழுகிய உணவு என்று ஏற்று, இதை சாப்பிட்டால் தனைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுமோ என்று அஞ்சி , பயந்துபோன நிலையில்,இந்த பாம்பினை உண்ணாமல் நீங்கி சென்றுவிடும்.


அதன் பின்னர் சிறுது நேரம் கழித்து இந்த பாம்பு எழுந்து தப்பி சென்றுவிடும்.




அறியாள்: இப்படி ஏமாற்றுவது தவறா ?

தமிழாசிரியர்: தன்னை  காப்பாற்றிக்கொள்ள நடிப்பது தவறு அல்லவே ?

டாக்டர்: ஒரு வகையில் சரி. ஒரு வகையில் தவறு. 

எழில்: இந்த செய்தியை இங்கு நாம் காண காரணம் என்ன ?

தமிழாசிரியர்: மனிதர்கள் சில சமயங்களில் மிருகங்களை விட கீழான வாழ்வியல் முறைகளை ஏற்கின்றனர் என்று விளக்கவே இந்த உதாரணத்தை இங்கு நாம் கூறினோம்.


எழில்: அது என்ன, விளக்கமாக கூறவும்.

டாக்டர்: இறைவனை வழிபாடு செய்வதையே  ஒரு நடிப்பாக நடிக்கும் மக்களும் உலகில் உண்டு. 

அறியாள்: நம்ப முடியவில்லையே, கடவுள் வழிபாட்டில் கூடவா பொய்மை இருக்கும் ?


டாக்டர்: ஆம் உண்டு, மனிதர்கள் முன்னிலையில் பக்தி உள்ளவர்கள் போல நடிக்கும் மக்கள் இருப்பது உண்மையே. இப்படியானவர்களை மனிதர்கள் கண்டு ஏமாறலாம், ஆனால் இறைவன் இவர்களை சரியாக அறிவான், மனிதர்களின் இந்த குணம் பற்றி இசுலாமியர்களின் வேத நூலான திருக்குர்ஆனில் ஒரு குறிப்பு உள்ளது.     

தமிழாசிரியர்: நான்காவது பாடலை இனி காண்போம்.

உள்ளபடி வாழ்த்துகின்றோர் என்று நான்காவது பாடலில் ஒரு வரி உள்ளது.

இந்த வரியில் என்ன அறிவியல் பொருள் உள்ளது என்று காண்க ?

டாக்டர்: மனிதர்களின் உளவியல் தந்திரங்களை அலசும் நிலையில் மிகவும் கீழான நிலைக்கும், மிகவும் மேலான நிலைக்கும் அவர்களால் உடனுக்குடன் பயணிக்க முடிவதை நம்மால் காண முடியும். இது மனிதர்களின் சிறப்பியல்பு, தனியியல்பு 

சில சமயங்களில் இறைவனை பற்றிய சிந்தனையை உண்மையாக உள்ளத்தில் ஏற்காமல், வெறுமனே பிறருக்கு காட்டி வாழ்வதற்கு விரும்பி  நடிப்பாக சிலர் இறைவழிபாடு செய்வதை நம்மால் காண முடியும்.

எழில்: இப்படி செய்வது மிகப்பெரிய குற்றமே.

மலர்: ஆம், கீழினும் கீழான செயல்.

டாக்டர்: ஐந்தாவது பாடலை இனி காண்போம்

தமிழாசிரியர்: மனமெனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அறும் என்று வள்ளலார் கூறுவதன் பொருள் என்ன ?

எழில்:  நீங்களே சொல்லுங்கள்......


தமிழாசிரியர்: உலக வாழ்க்கையில் தினமும், பல்வேறு வகையான நினைவுகள் நமது உள்ளத்தை எதிர்கொள்ளும் அதன்  விளைவாக, தீய நினைவுகளின் தாக்கத்தால் மாசுபடும் மனம் என்ற உளவியல் கூற்றை விளக்குகிறார் வள்ளலார். 

மலர்: தூய உள்ளம் மாசுபடுவதும் அது பின்னர் மாசு அகற்றி தூமை அடைவதும் மாறி மாறி நிகழும் நிகழ்வுகள் என்று இந்த பாடல் மூலம் நம்மால் ஏற்க முடியுமா ?


டாக்டர்: இது உளவியலும் மென்ஞானமும் உரசிக்கொள்ளும் இடம். 

2 comments:

  1. மேலும் அறியக் காத்திருக்கேன். நன்றி.

    ReplyDelete