Total Pageviews

Friday, 13 December 2013

அத்தியாயம் - ஏழு - “காம வுட் பகைவனுற்” - சிற்பி அவன், சொற்பமே நாம்.

அத்தியாயம் - ஏழு 


தமிழறிஞர்: சரி, ஆறாவது பாடலை இனி காண்போம்.

மருத்துவர்: காம வுட்  பகைவனுற் என்று ஒரு சொற்றொடர் ஆறாவது பாடலில் வருகிறது.

ஜெயஸ்ரீ: இதன் பொருள் என்ன ?

மருத்துவர்: காமம் சார்ந்த உடல் இயக்க இயல் செயல்பாடுகளும் தாக்கங்களும் பருவம் அடைந்த காலத்திற்கு பின்னரே தனது தாக்கத்தை மனித உடலில் செலுத்தும் என்பது தவறு.  

காமம் சார்ந்த செயல்பாடுகள் மனித உடல் வளர வளர உடன் சேர்ந்து வளர்ந்து; முதிர்ந்த நிலைப்பாட்டை நிர்ணயிக்கப்பட்ட வயதை நாம் அடையும் நிலையில் அடைகின்றன.

நமக்குள் நிகழும் பல நிகழ்வுகள் நமது அறிவிற்கு எட்டாத நிலையில்,ஆழத்தில் நிகழ்கின்றன.

காரணம், நமது உடலின் முழு செயல்பாடுகளையும் நம்மால் உணர முடியாது

நாமாக இருப்பினும் நம்மை நாம் இயக்குவதில்லை.

நமது உடல் இறைவன் படைத்தது, அதில் நிகழும் நிகழ்வுகள் அவன் வடிவமைத்தவை.

சிற்பி அவன், சொற்பமே  நாம்.

ஜெயஸ்ரீ: வுட்  பகை”, மேலும் விலக்குக.
           
மருத்துவர்: அறிவியலின் ஆழத்தில் சென்று காணவேண்டிய ஒரு உளவியல் சார்ந்த உடல் இயக்க இயல் (Psychophysiology) கோட்பாடு இது. 


காமம் சார்ந்த உடல் இயக்க இயல் செயல்பாடுகள் கருவிலே தோன்றிக் குழவிப் பருவத்தே முளைத்து இளமை வளர வளர்ந்து பிற உயிர்களை படைக்கும் காளைப் பருவத்தில் முகிழ்ந்து மலரும் இயல்பிற்றாதலின் அதனை காம வுட் பகைவன்என்று கூறுகிறார் வள்ளலார் (உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப்பிள்ளை உரை)   

மலர்:மேலும் விளக்கவும்.

மருத்துவர்: காமம் சார்ந்த உடல் இயக்க இயல் செயல்பாடுகளும் தாக்கங்களும் பருவம் அடைந்த காலத்திற்கு பின்னர் மட்டுமே தங்களது தாக்கத்தை மனித உடலில் செலுத்தும் என்பது பொதுவாக மக்கள் ஏற்கும் எதிர்பார்ப்பு. 

ஆனால், நவீன மரபியல் ஆய்வுகள்  வேறாக உண்மையை இயம்புகின்றன.

ஒரு கரு தனது தாயின் கருவறையில் உள்ள நிலையிலேயே (Inside Uterus) (Intrauterine), அது பெண் சிசுவாக இருக்கும் நிலையில் அதன் உடலில் உள்ள கருவகம் (Ovary) என்னும் பகுதியில் சுமார் பத்து லட்சம் கரு முட்டைகளின் உருவாக்கத்தின் துவக்கம் துவங்கிவிடும்.




ஆனால்,இன்றும் அறிவியல் முழுவதும் கண்டறியாத ஒரு உயிர்வேதியியல் பொருள் (biochemical substance) கருமுட்டைகளை சூழ்ந்துள்ள இடத்தில் சுரக்கிறது.

கருமுட்டைகளின் வளர்ச்சியை அப்படியே அது முடக்கி (Freeze) விடுகிறது.

இதனை CSF (cytostatic factor) என்று அழைப்பர், மேலும் MPF (maturation promoting factor) என்ற ஒன்றும் உள்ளது.


மலர்: சற்று பொறுங்கள்?
நீங்கள் சொல்வது முழுவதும் விளங்கவில்லை.
ஒரு பெண் சிசு தனது தாயின் கருவறையிலுள்ள நிலையிலேயே பத்து லட்சம் உயிர்களை உருவாக்கும் அடிப்படைக்கூறு அதனுள் உள்ளதா ?


மருத்துவர்: ஆம் உள்ளது.
ஆனால், பல்வேறு உயிரியல் நிகழ்வுகள் ஒரு கோர்வையாக பணிசெய்து, வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே உயிர்களை வெளிப்படையாக உருவாக்கும் திறனை மனித இனத்திற்கு கொடுத்துள்ளது.


அறியாள்: ஒரு உயிரினுள் பல லட்சம் உயிர்களின் மூலம் எவ்வாறு இருக்க  முடியும் ?



மருத்துவர்: கோடி உயிர்களை ஒரு உயிரில் இருந்து (ஆதம்) படைக்கும் திரன் உடைய இறைவனால் எல்லாம் முடியும். 



No comments:

Post a Comment