அத்தியாயம் - 6
இந்த அத்தியாயத்தில் இருந்து ஜெயஸ்ரீ என்றொரு புதிய கதாப்பாத்திரம் கதையில் இணைக்கப்படுகிறது
யார் இந்த ஜெயஸ்ரீ ?
இவர் ஒரு மருத்துவ மாணவி, MBBS பயிலும் மருத்துவ மாணவியாக இவர் கதையில் பயணிப்பார்
ஜெயஸ்ரீ: பொதுவாக ஆன்மீக சிந்தனைகள் அமைதியை உலகில் தோற்றுவிக்க வேண்டிய பணியினை செய்ய வேண்டும்.
இதுதான் பொதுவான எதிர்பார்ப்பு
ஆனால் மாறாக, அமைதியை உலக மதங்களில் தேட வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளதே இந்த நிலை ஏன் ?
மருத்துவர்: ஆழமாக சென்று விடை காணவேண்டிய கேள்வி இது.
தமிழறிஞர்: செல்வோம், வெல்வோமா ?
அமைதியான வழிபாட்டு முறைகளை அர்த்தமற்றவை என்று அவர்கள் ஏற்பர்.
இந்த அத்தியாயத்தில் இருந்து ஜெயஸ்ரீ என்றொரு புதிய கதாப்பாத்திரம் கதையில் இணைக்கப்படுகிறது
யார் இந்த ஜெயஸ்ரீ ?
இவர் ஒரு மருத்துவ மாணவி, MBBS பயிலும் மருத்துவ மாணவியாக இவர் கதையில் பயணிப்பார்
ஜெயஸ்ரீ: பொதுவாக ஆன்மீக சிந்தனைகள் அமைதியை உலகில் தோற்றுவிக்க வேண்டிய பணியினை செய்ய வேண்டும்.
இதுதான் பொதுவான எதிர்பார்ப்பு
ஆனால் மாறாக, அமைதியை உலக மதங்களில் தேட வேண்டிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளதே இந்த நிலை ஏன் ?
மருத்துவர்: ஆழமாக சென்று விடை காணவேண்டிய கேள்வி இது.
தமிழறிஞர்: செல்வோம், வெல்வோமா ?
மருத்துவர்: ஆன்மீகத்தை ஒரு கடலின் உதாரணத்தை வைத்து விளக்க முடியும்.
ஆன்மிகம் என்பது ஒரு பெரும் கடலைப் போன்றது.
ஆன்மிகம் என்பது ஒரு பெரும் கடலைப் போன்றது.
ஆன்மீகத்தில் பயணிப்பது கடலினில் பயணிப்பதை போன்றது.
இந்த சிந்தனையுடன்,
மனிதர்களுக்கும் - இறைக் கோட்பாட்டிற்குமான தொடர்புகளை அணுகுவோம்.
சில மனிதர்கள் கடலின் கரையில் நின்று கடலின் அழகினை ஆரவாரத்துடன் கண்டு மகிழ்வர்.
அவர்களைப் பொருத்தவரை, மதம் என்பது ஆரவாரத்துடன் இணைந்த ஒன்றாகும்.
மத வழிபாட்டையும் ஆரவாரத்தையும் பிரித்து அறிய அவர்களால் முடியாது.
மத வழிபாட்டு நாட்கள் சார்ந்த அரசு விடுமுறை எந்த தேதியில் வருகிறது ? என்று
வருடத்தின் முதல் நாளில் அலசி ஆராயும் மக்கள் இவர்கள்.
ஆராய்ந்து அது ஞாயிறு அன்று வந்தால் முகம் சுளித்து
திங்கள் என்றால் முகம் மலர்ந்து சிந்திக்கும் சாமானிய மக்கள் இவர்கள்.
இதுதான் பெரும்பான்மையான கூட்டம்.
இது குறையாது
இது நிறையாது
நாத்திகவாதிகள், கடவுள் நம்பிக்கையாளர்களை கண்டு கைதட்டி சிரிக்க இவர்கள் காரணமாக இருப்பர்.
தங்களது கோட்பாட்டிற்கு எதிராக யாரேனும் சிந்தித்தால், செயல்பட்டால், உடனே அதனை எதிர்த்து மதத்தினை காக்க போர்க்கொடி தூக்கும் மனப்பக்குவம் இவர்களுக்குண்டு.
வேறு ஒரு குழுமமும் மனிதர்களுள் உண்டு.
இவர்கள் கரையை விட்டு அகன்ற ஆழமான கடலில் வெகுதூரம் பயணித்து அதன் பின்னர் கரைக்கு மீண்டு வரும் மக்களைப் போன்றவர்கள்.
இவர்களுக்கு இறைக் கோட்பாட்டின் ஆழம் ஓரளவிற்கு நன்றாகவே புரியும்.
மதக் காழ்ப்புணர்வு இவர்கள் உள்ளத்தில் அமையப்பெறாது.
அனைத்து மக்களையும் அனைத்து வாழும் உள்ளம் இவர்களுக்குண்டு
மேலும் ஒரு குழுமமும் மனிதர்களுள் உள்ளது
இவர்கள்தாம் பெரியவர்கள் , ஞானிகள் , சூஃபிகள் (SUFI) - இவர்கள் ஆன்மீகத்தின் ஆழ் கடலில் மட்டுமே இருப்பார்கள்
கடலின் கரையை என்றுமே அணுக மாட்டார்கள்
இவர்களுக்கு சுயநலம் என்று ஏதும் இருக்காது
சுயம் என்பதை மறுத்த மறந்த மக்கள்
இவர்களைக் காண்பது அரிது
மக்களிடையே வாழும் நிலையிலேயே மறைந்துவிடக்கூடிய திறன் இவர்களுக்கு உள்ளது.
இவர்களைப்போல அனைவரும் ஆக முடியாது
வள்ளலார் இந்த மெல்லிய குழுமத்தை சார்ந்தவர்
எழில்: திருவருட்பாவில் எத்தனை பகுதிகள் உள்ளன ?
தமிழறிஞர்: திருமுறைகள் என்று காணுகையில் ஆறு திருமுறைகள் உள்ளன.
அறியாள்: தமிழ் மக்களுக்கு இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை கொடுத்த வள்ளலாரை அவர் காலத்து மக்கள் மகிழ்வாக வைத்தார்களா ?
மலர்: வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றினை ஆழ்ந்து படியுங்கள் , உங்களுக்கு அதில் நிறைய செய்திகள் உள்ளன. இது அவரின் சொற்களில் காணப்படும் அறிவியல் சிந்தனை பற்றிய ஆய்வு மட்டுமே.

வணக்கம்
ReplyDeleteதாங்கள் தற்போதைய உலக மக்களின் இறை உணர்வை கண்டது, மிக உண்மை ..
இந்நிலை மாறும், அவர்கள் இறை உண்மையை அறியும் நாளில்....
அறிவின் அறிவியல் அகிலத்தை அறியவைக்கும் ...
அன்புடன் ..
இரா.அறிவழகன் .