(அன்று) கடைவிரித்தார் கொள்வாரில்லை......
(இன்று) அவரை கட்ட விடமாட்டோம்......
Imparting Science to School Students Using Thiruvarutpa
Volume - I
Songs 1 to 25
Name of the Series :
“Learning Science through
Religious Literary Works in Tamil”
வள்ளலார் போன்ற ஒரு அற்புத மனிதரை பெற்றது தமிழ்ச்சமூகம் பெற்ற பேறு, - ஜாதி அரசியல் - சினிமா மோகம் - அயல் மொழி மோகம் - கலாசார சீரழிவு - என்று பல முனைகளில் சிக்கி சின்னாபின்னமாக அலைக்கழியும் தமிழ் சமூகத்தை நேர் வழிக்கு அழைத்துச்செல்லும் வல்லமை திருவருட்பாவுக்கு உண்டு.
நிகழ வேண்டிய காலம் வரும் பொழுது நிகழ வேண்டிய அனைத்தும் நிகழ்ந்தே தீரும்.......
நூலின் பெயர் :
திருவருட்பாவின் மூலம் அறிவியல் கற்போம்
தொகுதி - ஒன்று
இது ஒரு வித்தியாசமான முயற்சி, இறைவன் போதுமானவன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா தமிழர்களுக்கு கிட்டிய ஒரு சிறப்புக்குரிய இலக்கியம்.
அருள் நிறைந்த பாக்களின் சிறப்பை உலகம் முழுவதும் பல அறிஞர்கள் ஆராய்ந்து மக்களுக்கு இயம்பி உள்ளார்கள்.
அனைவரின் முயற்சிகளையும் வாழ்த்தி ஏற்பதில் பெருமிதம் அடைகிறேன்.
ஒரு சிறப்பான இலக்கியத்தை பல அறிஞர்கள் பல கோணங்களில் ஆராயும் பொழுதுதான் அதன் அனைத்து சிறப்புகளும் உலகிற்கு கிட்டும்.
இராமலிங்க அடிகள் என்றவுடன் புலால் மறுப்பு வாழ்வுமுறை என்னும் தத்துவம் நமக்கு நினைவிற்கு வருவது மகிழ்ச்சியான செய்தியாகும்.
அதையும் மீறிய பல சிந்தனைகள் திருவருட்பாவினுள் உள்ளது.
மென்ஞானத்தையும் மீறிய ஒரு சிறப்பு அதனுள் உள்ளது.
அறிவியல் சார்ந்த பல செய்திகள் அதனுள் உள்ளது
அவற்றை வெளிக்கொணரும் பயணம் இது.
மதங்களை மீறிய பயணம் இது.
அத்தியாயம் - ஒன்று
மலர்: வணக்கம். பிலோசின் தமிழ் இலக்கிய ஆய்வு நிலையத்துக்கு உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி.
எழில்: இன்று எந்த தமிழ் இலக்கியத்தைப் பற்றி நாம் காணப்போகிறோம் ?
மலர்: திருவருட்பா.
எழில்: வடலூர் இராமலிங்க அடிகளார் எழுதிய திருவருட்பாவா ?
மலர்: ஆம், அதுவே.
எழில்: என்ன சொல்கிறாய், முழுக்க முழுக்க அது ஒரு மத நூலாயிட்ரே !!!, அதனுள் அறிவியல் எப்படி இருக்கும் ?
மலர்: ஞானிகளை பற்றிய தெளிவு உன்னிடம் இல்லாது போனது ஏன் ?, இராமலிங்க அடிகள் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த மஹான். அவரது எழுத்துக்களின் ஆழத்தை தமிழ் மக்கள் இன்னமும் முழுவதுமாக புரிந்துகொள்ளவில்லை.
எழில்: நம்முடைய இந்த பயணம், ஒரு மத பிரசங்கமாக அமையப்போகிறது என்று சொல்.
மலர்: நிச்சயமாக இல்லை. திருவருட்பாவில் உள்ள ஆன்மீக சிந்தனைகளை சத்தியமாக இன்று நாம் அலசப்போவதில்லை. நித்தமும் இந்தப் பணியினை நூற்றுக்கணக்கான ஆன்மீக சிந்தனையாளர்கள்; உலகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் பணியினை நாம் போற்ற வேண்டும். நமது பயணம் வெறுமனே அறிவியல் சார்ந்த பயணமாக மட்டுமே அமைந்திருக்கும்.
பேசிக்கொண்டே அறிவியல் ஆய்வு நிலையத்தை அடைந்தார்கள்.
அவர்கள் இருவரையும் அறியாள் வரவேற்றார்.
அறியாள்: வருக, வருக. தெளிவினை நோக்கி பயணிக்கும் இளைஞர்களே உங்களுக்கு வணக்கம்.
எழில்: நீங்கள் தெளிவை நோக்கி பயணித்து விட்டீர்களா ?
மலர்: எது தெளிவு, அறிவியல் கற்பதா ? ஆன்மிகம் கற்பதா ?
அறியாள்: அறிவியலும் ஆன்மீகமும் வேறு வேறு என்று யார் உங்களுக்கு உரைத்தது ?
அறிவியலின் உச்சம் ஆன்மீகத்தில் முடிவுறும்.
அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் ஒரே மாதிரியான அடிப்படைதான் உள்ளது.
“தேடுதல்” என்பதே அந்த அடிப்படை.
எழில்: எனக்கு தெரிந்து தினசரி வாழ்வில் யாருமே மென்ஞானத்தில் விஞ்ஞானத்தை காண்பதில்லையே ?
மலர்: தேடுதல் மட்டுமே உள்ளது.
அறியாள்: எது தேடுதல் ?
பரீட்சைக்கு முன்னர் இறைவனின் அருளை தேடுவது தேடுதலா ?
நான்கு நபர்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் தனக்கு மட்டும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று வேண்டுவது தேடுதலா ?
தனக்காக தேடுவது தேடுதலா ?
இவற்றைத்தான் தேடுதல் என்று நீங்கள் ஏற்றால் இந்த தேடுதல் உள்ளவர்களுக்கு அறிவியலும் மெஞ்ஞானமும் வேறு வேறாகத்தான் தோன்றும்.
எழில்: அப்படியென்றால் ?
தொடரும்............
அன்புக்குரிய நண்பருக்கு வணக்கம் ,
ReplyDeleteஉலக அரங்கில் பாரத அறநூல்களில் நிறைந்துஉள்ள உண்மை நெறிகளை இதுவரை
எடுத்து இயம்ப எந்த முயசியும் இல்லை, திருக்குறளை தவிர அந்நூலும் ஆழமாக
எடுத்து உரைக்கவில்லை . ஏன் ? இந்த நிலை தாய் தமிழில் இருப்பதால் தான்.
இறுதியாக இம்மண்ணிலே வந்த அறநூல் திருஅருட்பா இது ஆண்டவரால் இராமலிங்க அடிகள் மூலம் நமக்கு கிடைத்த புதையல் ஆராய்ந்து அறிந்தால் மரணம் இல்லா பெருவாழ்வை அளிக்கும் சாகாகல்வி நிறைந்து உள்ளது .
தாங்கள் எடுக்கும் இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ....
சன்மார்க்க முயற்சியில் ...
இரா.அறிவழகன் .
புது முயற்சி; பெரிதும் வரவேற்புக்கு உரியது. அறிவுத் தேடலுக்கும் திருவருட்பாவில் இடம் உண்டு என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும் சேதி.
ReplyDeleteஅருமையான முயற்சி. வாழ்த்துகள்.... எழுத்துப் பிழைகள் உள்ளன. உதவி தேவைப்படின் செய்யத் தயாராக உள்ளேன்.
ReplyDelete